தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊர்காவல் படை பயிற்சி நிறைவு விழா... எஸ்.பி. பங்கேற்பு - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஊர்காவல் படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்றார்.

Kayts Training Completion Ceremony; S.P. Participation
Kayts Training Completion Ceremony; S.P. Participation

By

Published : Jan 4, 2021, 9:56 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்ற ஊர் காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு அணிவகுப்பு இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறையுடன் இணைந்து நேர்மையாகவும், மக்களின் நன்மதிப்பை பெற்றிடும் வகையில் கடமையாற்றுமாறும் ஊர்காவல் படையினருக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த பயிற்சி நிறைவு விழாவில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஆட்சி, கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டவர் பி.எச். பாண்டியன் - முதலமைச்சர் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details