பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி கிரிக்கெட் விளையாடிய 12 இளைஞர்கள், கொட்டரை அருகே உள்ள மருதையாற்றை சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது, அங்கிருக்கும் உபரி வடிகாலில் இறங்கி குளித்த இளைஞர்கள், திடீரென தடுமாறி நீரில் மூழ்கினர்.
உயிருக்கு போராடிய இளைஞர்களை மற்றொரு பக்கம் குளித்துக்கொண்டிருந்த ஆதனூரைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள் மற்றும் ஆனந்தவல்லி ஆகிய மூன்று பெண்கள் உடனடியாக நீரில் இறங்கி சேலையை வீசி இருவரை மீட்டனர். இதில், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் ரஞ்சித், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
தங்களது உயிரை கூட பொருட்படுத்தாமல் இளைஞர்களை காப்பாற்றிய மூன்று பெண்களின் வீர செயலை மாவட்ட காவல்துறையினர் பாராட்டினர். இந்நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் வீர செயல்புரிந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள் மற்றும் ஆனந்தவல்லி ஆகியோருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டது.
கல்பனா சாவ்லா விருது பெறும் பெண்கள் இதைத்தொடர்ந்து கல்பனா சாவ்லா விருது பெறவுள்ள செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா நேரில் வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
இதையும் படிங்க:மூணாறு நிலச்சரிவு: கேரள முதலமைச்சர் நேரில் ஆய்வு!