பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப்பரப்புரை பயண பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தேரடி திடலில், பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப்பரப்புரை பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “சமூகநீதி குறித்து கருணாநிதி ஒருவரே போதுமான விளக்கம் கொடுத்தார். பெண்களின் இட ஒதுக்கீடு உள்பட திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை உள்ளன. தமிழ்நாடு ஆளுநர் அரசுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார்.
அரசு ரகசியங்களை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்ற நிலையில், பாராளுமன்றத்தில் கனிமொழி எம்பி, தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டில் 20 மசோதாவை நிறைவேற்றாமல் அதனை ஆலோசனை செய்யாமல் இருந்து வருகிறார் என்ற கோரிக்கையை வைத்தார். அதற்கு ஆளுநர் பதில் சொல்வதற்கு பதிலாக, அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
அரசு ரகசியங்கள் மற்றும் ஆவணங்களை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று பதவி பிரமாணத்தில் இருக்கும்போது, அவர் அண்ணாமலையிடம் மசோதாவை பற்றி தெரிவித்துள்ளதால், அண்ணாமலை வெளியில் வந்து 15 மசோதாதான் பாக்கியில் உள்ளது. மீதமுள்ள 5 மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆளுநரின் மசோதா நிறைவேற்றத்திற்கும் இவருக்கும் (அண்ணாமலை) என்ன சம்பந்தம்? அரசு ரகசியங்களை வெளியிடும் ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற வேண்டாமா?” என்றார்.
இதையும் படிங்க:நேருவின் பெயரை பயன்படுத்துவதில் என்ன தயக்கம்..! எதிர்க்கட்சிகள் மீது மோடி தாக்கு