பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை நடத்தியது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் தேவநாதன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினைத் தொடங்கி வைத்தனர். மாணவர்கள் தங்களது படிப்பு முடிந்தவுடன் தொழில் தொடங்குவதற்கான பல்வேறு கருத்துரைகளும், தொழில் நெறி சார்ந்த புத்தகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.