பெரம்பலூர் மாவட்டம் நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், தீபா தம்பதி. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெங்கடேசன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
அவரது மனைவி தீபா, இரண்டு குழந்தைகள் ஆகியோர் நெற்குணத்தில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு (மார்ச்9) இவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவில் இருந்த 52 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.