தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் திருவிழாவில் தண்ணீர் பந்தல் அமைத்த இஸ்லாமிய இளைஞர்கள்! - குவியும் பாராட்டுகள் - பெரம்பலூரில் கோயில் திருவிழாவில் தண்ணீர் பந்தல் அமைத்த இஸ்லாமிய இளைஞர்கள்

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே நடைபெற்ற அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழாவில் தண்ணீர் பந்தல் அமைத்த இஸ்லாமிய இளைஞர் மன்றத்தினரைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

கோயில் திருவிழாவில் தண்ணீர் வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்
கோயில் திருவிழாவில் தண்ணீர் வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்

By

Published : Feb 23, 2020, 3:31 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் இன்று மயானக் கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவிற்காக மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கூடினர்.

இதனிடையே அரும்பாவூர் இஸ்லாமிய இளைஞர் மன்றத்தினர் பொதுமக்கள், பக்தர்கள் ஆகியோருக்குத் தாகம் போக்க தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை வழங்கினர். இஸ்லாமிய இளைஞர்களின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

கோயில் திருவிழாவில் தண்ணீர் வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்

மேலும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இவர்கள் முயற்ச்சிக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க:வீரப்பன் வழிபட்ட கோயிலின் தேர்த்திருவிழா; விமரிசையாகக் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details