தமிழ்நாடு

tamil nadu

பருத்தி அறுவடை செய்ய இயந்திரம் அறிமுகம்.. பெரம்பலூரில் விவசாயிகள் மகிழ்ச்சி!

By

Published : Feb 2, 2023, 9:32 AM IST

தமிழகத்திலேயே முதன்முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி அறுவடை செய்யும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தி அறுவடை செய்யும் இயந்திரம்
பருத்தி அறுவடை செய்யும் இயந்திரம்

பருத்தி அறுவடை செய்யும் இயந்திரம் அறிமுகம்

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் போன்ற விவசா பயிர்களே நினைவுக்கு வரும். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 13ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல இரண்டு மடங்கு பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வந்த நிலையில் ஆட்கள் பற்றாக்குறையில் காரணமாகவும், கூலி பிரச்சனை காரணமாகவும், விவசாயிகள் பருத்தி சாகுபடியிலிருந்து விலகி மாற்றுப் பெயருக்குச் செல்ல தொடங்கினர்.

இதனைக் கருத்தில் கொண்டு, பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பருத்தி விவசாயிகளின் நலன் கருதி, பருத்து பஞ்சு அறுவடை இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பருத்தி ஆராய்ச்சி மையம், வேளாண் தொழில்நுட்பத்துத் துறை மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் பருத்தி அறுவடை இயந்திரம் தமிழகத்திலேயே முதல் முறையாகப் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி மையத்தில் நேற்று (பிப்.1) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய இயந்திரத்தினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொடக்கி வைத்தார். இயந்திரத்தினை இயக்கி அது எவ்வாறு பருத்தி அறுவடை செய்கிறது என்பதனை தெரிவித்து விவசாயிகளுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். குறைந்த செலவில் குறைவான நேரத்தில் பருத்தி அறுவடை இயந்திரம் செயல்பட்டது விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றது.

தற்பொழுது உள்ள தொழில் நுட்பத்தின் படி விவசாயிகள் பயிரிடப்படும் மானாவாரி மற்றும் இரவை பாசன பருத்தி பயிர்களை அறுவடை செய்வதற்கு ஏதுவாக இல்லை என்றும், இதற்கென்று தனியாக ரகங்களைப் பயிர் செய்திட வேண்டும், அனைத்து ரகங்களில் உள்ள பருத்தியை அறுவடை செய்யும் அளவுக்கு இந்த இயந்திரத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் அல்லது இந்த இயந்திரத்திற்கு ஏற்றவாறு சாகுபடி செய்வதற்கு ஏற்ற ரகங்களை வேளாண்மைத் துறை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த இயந்திரத்தின் மூலம் ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தீரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிச்சார்த்த முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மட்டமன்றி 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயச் சங்க பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள், வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள், துறை சார்ந்த அலுவலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருச்சி - அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details