தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் வாக்கு எண்ணிக்கை மையம் பணிகள் தீவிரம் - latest election news

பெரம்பலூர்: தயாராகி வரும் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூரில் வாக்கு எண்ணிக்கை மையம் பணிகள் தீவிரம்
பெரம்பலூரில் வாக்கு எண்ணிக்கை மையம் பணிகள் தீவிரம்

By

Published : Mar 30, 2021, 5:25 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேப்பூர் அரசு கலைக் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

இதனிடையே பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான குரும்பலூர் அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் உயர் கோபுர கண்காணிப்பு மேடைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்ற பணிகளை கடலூர் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜா பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

இதையும் படிங்க:நாசா ஆய்வு: அபோபிஸ் விண்கல்லால் 100 ஆண்டுகளுக்கு ஆபத்து இல்லை!

ABOUT THE AUTHOR

...view details