முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருதையான் கோயில் தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் சார்பாக 1896 பயனாளிகளுக்கு ஆறு கோடியே 35 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.