தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 24, 2019, 5:25 PM IST

ETV Bharat / state

தனியார் வங்கியில் ரூ. 16லட்சம் கொள்ளை: ஒருவர் கைது

பெரம்பலூர்: திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஸ்டீபன்

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு திருச்சி தனியார் வங்கியில் இருந்து ஏடிஎம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போதை ஆசாமி ஒருவர், அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் அந்த நபரை துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
அங்கு அறை இல்லாததால், வேறு லாட்ஜூக்கு அவரை அழைத்துச் சென்றபோது, அந்த நபர் போதையில் ’தம்மிடம் நிறைய பணம் இருப்பதாகவும் அறை எடுத்துக் கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஒட்டுநர், உடனே அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார்.

அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் போதை ஆசாமி கொண்டு வந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் ரூ. 12லட்சத்து 97 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருச்சியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பதும், கடந்த 20ஆம் தேதி ஏடிஎம் மையத்திற்கு கொண்டு சென்ற பணத்தை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

ஸ்டீபன் சென்ற ஆட்டோ

ABOUT THE AUTHOR

...view details