கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதிவரை அமலில் உள்ளதால், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சிரமமின்றி பெறுவதற்கு பெரம்பலூர் நகராட்சி மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டி இன்று தொடங்கப்பட்டது.