தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

144 தடை மீறல்: பெரம்பலூரில் 1,911 பேர் கைது

பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை ஆயிரத்து 791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 911 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

in perambalur Thousands and  911 people arrested for violating the curfew
in perambalur Thousands and 911 people arrested for violating the curfew

By

Published : Apr 13, 2020, 12:14 PM IST

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல் துறையினர் வீடு வீடாகச் சென்று கரோனா அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சமூக இடைவெளி குறித்த அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றனர். ஆயினும் மக்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளை மீறி தொடர்ந்து சாலைகளில் பயணித்துவருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினர் பல்வேறு எச்சரிக்கை, கோரிக்கைகள் விடுத்தும் அதனை பொருட்படுத்தாததால் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களைப் பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 911 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 195 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு மீறல்: புதுச்சேரியில் 1,830 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details