பெரம்பலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசின் சிறுதொழில் மானியத்தோடு பாக்கு மட்டை தட்டுகள் செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள தம்பிரான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் பாக்கு மட்டையில் உருவான சாப்பாடு தட்டுகள் தயாரிப்பு செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றார். சிறியது முதல் பெரியது வரை என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டுவரும் தட்டுகளின் மதிப்பு இரண்டு முதல் 10 வரை ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுவருகிறது.
இந்தத் தட்டுகள் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு தயார் செய்யப்படுவதால், பொதுமக்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இருந்தும் - பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பாக்கு மட்டை தட்டுகளை வாங்கிச் செல்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.