பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால், விவசாய நிலங்களில் நட்டு வைக்கப்பட்டிருந்த 1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுள்ளன. அதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கக்கூடும் என தெரிகிறது.
கன மழையினால் 700க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் நாசம்! - 700 areca tree damaged
பெரம்பலூர்: மலையாளப்பட்டு கிராமத்தில் நேற்று அடித்த சூறைக்காற்றுடன் பெய்த மழையினால், 700க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் விழுந்து நாசமாகியது, அதற்கு நஷ்ட ஈடு வழங்ககோரி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பாக்கு மரங்கள் நாசம்
இது குறித்து விவசாயி ஒருவர் கூறிகையில், "பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றோம். கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டதின் காரணமாக மரங்கள் நடமுடியாமல் இருந்தது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி சாகுபடி செய்யப்பட்ட பாக்கு மரங்கள் தற்போது சேதமடைந்ததுள்ளது. ஆகையால் சேதமடைந்த மரங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன் வர வேண்டும்." என ஒட்டுமொத்த விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன மழையினால் 700க்கும் மேற்பட்ட மரங்கள் நாசம்!