கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
இதனிடையே பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் பார் செயல்பட்டு வந்த இடத்தில் கள்ளத்தனமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டன.
மேலும் டாஸ்மாக் நிர்வாகம் டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபான பாட்டில்களை விற்பனை செய்துவரும் நிலையில் மொத்தமாக ஒரே இடத்தில் 500 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், டாஸ்மாக் விற்பனை முடிந்தவுடன் கள்ளத்தனமாக விற்பதற்கு பதுக்க வைக்கப்பட்டதா? மேலும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில மது விலக்கு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மதுபாட்டில் பதுக்கி வைக்கப்பட்டதாக டாஸ்மாக் பாரில் வேலை செய்த ராமச்சந்திரன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகர்ப்புற பகுதியில் மொத்தமாக 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 500 மதுபான பாட்டில்கள் பறிமுதல் - மதுபான பாட்டில்கள் பறிமுதல்
பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் அருகே கள்ளத்தனமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுளளன.
liquor bottle