தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னறிவிப்பின்றி இரவில் அணை திறப்பு: கிராம மக்கள் சாலை மறியல் - Dam opening at night without warning

பெரம்பலூர்: இரவு நேரத்தில் முன்னறிவிப்பின்றி விசுவக்குடி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முன்னறிவிப்பின்றி இரவில் அணை திறப்பு:கிராம மக்கள் சாலை மறியல்
முன்னறிவிப்பின்றி இரவில் அணை திறப்பு:கிராம மக்கள் சாலை மறியல்

By

Published : Feb 10, 2021, 7:10 PM IST

பெரம்பலூர்: இரவு நேரத்தில் முன்னறிவிப்பின்றி விசுவக்குடி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அணை கட்டப்பட்டது. அண்மையில் பெய்த தொடர்மழையால் அணை முழு கொள்ளளவை எட்டியதால் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலோடு கடந்த மாதம் அணை திறந்து விடப்பட்டது.

தற்போது அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியவுடன் அதனை திறப்பதற்கு பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு (பிப்.9) விசுவக்குடி அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

விசுவக்குடி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது

இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் அன்னமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களை சரி செய்ய பல முறை கோரிக்கை வைத்தும் அது சரிசெய்யப்படவில்லை. இந்நிலையில் விஸ்வகுடி மக்கள் குடிநீர் தேவைக்கு அணையின் தண்ணீரை பயன்படுத்திக் கொள்வதால் அண்ணமங்கலம் ஊராட்சிக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் இரவு நேரத்தில் அணையை திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்

இதையும் படிங்க:பொதுமக்கள் தூர்வாரிய ஏரி வெள்ளத்தால் உடைப்பு - அலுவலர்களை முற்றுகையிட்ட மக்கள்

ABOUT THE AUTHOR

...view details