பெரம்பலூர் அருகே உள்ள பெரிய சமுத்திரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நீர்வழி புறம்போக்குபகுதி உள்ளது. இந்தப் பகுதி வழியாக மழைக்காலங்களில் நீர் சென்று மருதை ஆற்றை அடையும்.
சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் மனு - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு
பெரம்பலூர்: சட்டவிரோதமாக ஆக்கிரமித்து நீர் செல்ல விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதனிடையே கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், பழனிஆண்டி, அம்மாசி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் ஜேசிபி எந்திரங்கள் உடன் வந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மண்ணைக் கொட்டி மழைநீரை செல்லவிடாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகின்றது.
எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.
இதையும் படிங்க: கறிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றது ஏன்? இளைஞர்கள் பரபரப்பு வாக்குமூலம்