கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா, துரிதமான நடவடிக்கையால் அத்தியாவசிய தேவை மற்றும் விவசாயிகள், கால்நடைகள் பராமரிப்பிற்காக வெளியே சென்று ஊருக்குள் திரும்பும் அனைத்து நபர்களும், கை கால்களை கழுவிக்கொண்டு வரவேண்டுமென ஊர் எல்லைப்பகுதியில் தனியாக வாட்டர் டேங்க் அமைத்து கிருமிநாசினி மற்றும் சோப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
கைகளை கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதி...! - கைகளை கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதி
பெரம்பலூர்: ஊருக்குள் வந்தால் கை கழுவிவிட்டு சுத்தமாக வர வேண்டும், வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகு அனுமதிக்கப்படும் என்று செங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார்.
வெளியே சென்று வந்த பொதுமக்கள் கைகளை கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களின் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி ஊராட்சி மன்ற தலைவரின் இந்த துரிதமான பாதுகாப்பான செயலை பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி நேரில் பார்வையிட்டார்.
அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும் பொதுமக்களுக்கு அரசின் மக்கள் ஊரடங்கு பாதுகாப்பு குறித்து தெரிவித்து அவசியமின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம், முகக் கவசம் அணியவும், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.