தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை வெட்டி கொலைசெய்த கணவர் கைது - மனைவியை வெட்டி கொன்ற கணவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தில் மனைவியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த கணவரை காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மனைவியை கொலை செய்த கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவர் கைது

By

Published : Feb 14, 2022, 9:50 PM IST

பெரம்பலூர்:ஒகளூர் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஆறுமுகம். இவரது மனைவி முத்துலெட்சுமி. இவர் இன்று (பிப்ரவரி 14) சமையலுக்காக இறைச்சியை வெட்டிக் கொண்டிருக்கும்போது கணவர் ஆறுமுகம், முத்துலெட்சுமிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், மனைவியை அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முத்துலெட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து ஆறுமுகம், தனது மனைவியின் கழுத்தை வெட்டிவிட்டதாக அருகே இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது முத்துலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு காவல் துறையினர், ஆறுமுகத்தை கைதுசெய்தனர்.

மனைவியை கொலைசெய்த கணவர் கைது

பின்னர் முத்துலட்சுமியின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து ஆறுமுகத்திடம் கொலை நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கார்! சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details