தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை: சோக சம்பவத்தின் பின்னணி என்ன? - husband and wife

பெரம்பலூர்: செங்குணம் கிராமத்தில் கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை !

By

Published : Aug 2, 2019, 10:07 PM IST

Updated : Aug 3, 2019, 12:01 AM IST

பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (37), இவரது மனைவி ரேவதி (32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்களின் வீடு பூட்டி இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பெரம்பலூர் அருகே கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

மேலும், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட இருவரது உடலையும் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Aug 3, 2019, 12:01 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details