தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டிலிருந்த கணவன் மனைவி கழுத்தறுத்து கொலை - போலீஸ் விசாரணை - வீட்டிலிருந்த கணவன் மனைவி கழுத்தறுத்து கொலை

பெரம்பலூர்: வீட்டிலிருந்த கணவன், மனைவி கழுத்தறுத்து கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

murder
murder

By

Published : Jun 8, 2021, 11:02 PM IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி அறிவழகி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். சத்யா திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். முருகானந்தம் சென்னையில் உள்ள கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.

இதனால் பெரியசாமியும் அறிவழகியும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று (ஜூன்.8) நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிலிருந்து வெளியில் வராததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, பெரியசாமியும் அறிவழகியும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் குன்னம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமையிலான காவலர்கள், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த அறிவழகியின் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி செயின் உள்பட நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. நகைக்காக இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து கொள்ளையர்களின் அடையாளங்களை சேகரிக்கும் வகையில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details