பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்தாண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால், சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். குறிப்பாக குன்னம், காடூர், நல்லரிக்கை, களரம்பட்டி, அம்மாபாளையம், அரும்பாவூர், பெரியம்மா பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் அதிகளவு நெல் சாகுபடி - கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தாண்டு அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் பயிரிடப்பட்ட நெல் இம்மாதம் அறுவடைக்கு தயாராக உள்ளது. சில இடங்களில் சாகுபடி தொடங்கிவிட்டன. அதற்காக காடூர், அரும்பாவூர், அகரம் சிகூர், எழுமூர், நன்னை உள்ளிட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், கடந்தாண்டு நெல் சாகுபடி குறைவாக இருந்ததால் இரண்டு கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்பட்டன. ஆனால் இந்தாண்டு அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு - ஈரப்பதத்தை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை