உலக மக்களை பெருமளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து உலக மக்களை காப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது.