தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழிந்து வரும் 400க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்கள் - போராடி மீட்கும் மோகனகிருஷ்ணன் - அழிந்து வரும் 400க்கு மேற்பட்ட மூலிகை தாவரங்கள்

பெரம்பலூர்: அழிந்து வரும் 400க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களை வருங்கால தலைமுறைக்கு அடையாளம் காட்டப் போராடி வருகிறார், மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன்.

மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன்
மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன்

By

Published : Feb 10, 2020, 11:59 PM IST

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போன மாவட்டங்களின் வரிசையில், பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. வறட்சியான இந்த பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகளாக உயிரைக்கொடுத்து போராடி, தற்போது நூற்றுக்கணக்கான மூலிகைத் தாவரங்களை வருங்கால தலைமுறைக்கு அடையாளம் காட்ட போராடுகிறார், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது இயற்கை ஆர்வலர் மோகனகிருஷ்ணன் அவரது மகன் மகேந்திரன்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் து.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று தனக்கு சொந்தமான 17 ஏக்கர் மானாவாரி நிலத்தில் மூலிகைப் பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார். இவரது முன்னோர்கள் இயற்கை வைத்தியர்கள் ஆக இருந்து மூலிகைத் தாவரங்களை வாங்கிப் பயன்படுத்திய நிலையில், மூலிகைத் தாவரங்களின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, இரவு பகல் பாராது காடுகள் மலைகள், வெளி மாநிலங்களுக்குச் சென்று அரிய வகை மூலிகைத் தாவரங்களை தேடிப் பிடித்துக் கொண்டு வந்து, தனது பண்ணையில் நட்டு வளர்த்து பராமரித்து வருகிறார் மோகனகிருஷ்ணன்.

இவர் இதுவரை 700க்கும் மேற்பட்ட மூலிகைகளை அடையாளப்படுத்தி பாதுகாத்து வருகிறார். மூலிகை சேகரிப்பு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் நடைபெறும் இயற்கை வேளாண் கண்காட்சிகளிலும் தனது மூலிகைத் தாவரங்களை கொண்டு வந்து காட்சி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது மூலிகைப் பண்ணைக்கு சித்த மருத்துவம், தாவரவியல் பாடப் பிரிவு மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆயுர்வேத சித்த மருத்துவ மாணவர்கள் எனப் பலரும் வருகை தந்து பார்வையிட்டு பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், இவரது மூலிகை சேகரிப்பு சேவையைப் பாராட்டி மத்திய அரசும், மாநில அரசும் ஏராளமான சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி சிறப்பித்துள்ளது. இப்பகுதி மக்கள் இவரை மூலிகை நேசன் என்ற அடைமொழியோடு அழைக்கின்றனர்.

இவரது மூலிகைப் பண்ணையில் ருத்ராட்ச மரம், திருவோடு மரம், வெள்ளை நாவல் மரம், சிவன் குண்டல மரம், ஒருவன் வெண்தேக்கு, நாட்டு செம்பருத்தி உள்ளிட்ட பல்வேறு மரங்களும், கொடி காஞ்சிரம், இலுப்பை, பெரியாநங்கை, ஆரோக்கிய பச்சை, நெய் வள்ளி, சிறு மரம் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை மூலிகைகளையும் பராமரித்து வருகின்றார்.

மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன்
இதனிடையே இன்றைய இளைய தலைமுறையினர் அழிந்துவரும் மூலிகைச் செடிகளை அறிவதற்காக இன்று அவரது பண்ணையில் மூலிகைப் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சியும், அதுபற்றிய பல்வேறு நன்மைகளையும் எடுத்துரைத்தார்.

மேலும், மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன், அவரது மகன் மகேந்திரன் ஆகியோர் தற்போது தீவிரமாக அரிய வகை மூலிகைச் செடிகளை பாதுகாத்து வருகின்றனர். மூலிகை விதைகளையும் சேகரித்து வருகின்றனர்

அரியவகை மூலிகைகளைக் காண்பதற்காக நாள்தோறும் ஏராளமான மாணவர்கள், இயற்கை விவசாயிகள் வந்து பார்த்து அதைப் பற்றிய நன்மைகளை அறிந்து செல்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு மூலிகைத் தாவரங்கள் அருமருந்தாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிகில் விவகாரம்: வருமான வரித்துறையினரிடம் அவகாசம் கேட்ட 'மாஸ்டர்' விஜய்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details