பெரம்பலூர்: இன்று(ஜூன் 02) காலை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், மாலை சுமார் 4 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. பலத்த சூறாவளி காற்றுடன், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. மேலும் பலத்த காற்றினால், பெரம்பலூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சுங்கச்சாவடி மேற்கூரை தூக்கி வீசப்பட்டு வயல்வெளியில் விழுந்தது, சுங்கச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.