பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனராகப் பணிபுரிந்து வருபவர் திருமால். இவர் கிருத்திகா என்ற மருத்துவருக்கு அடிக்கடி மாற்றுப் பணிகள் வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்துப் பேசுவதற்காக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் செந்தில், மருத்துவப் பணிகள் இணை இயக்குனரை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மருத்துவர் செந்தில் இணை இயக்குனருக்கு மிரட்டல் அளிக்கும் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.