தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் தங்கத்தை உருக்கி பிஸ்கட் ஆக மாற்ற அரசு குறி- ஹெச்.ராஜா

கோயில்களில் இருக்கும் தங்கத்தை உருக்கி பிஸ்கட்டுகள் ஆக்கவே அரசு குறியாக செயல்படுகிறது என பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா தொடர்பான காணொலி
செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா தொடர்பான காணொலி

By

Published : Oct 25, 2021, 6:29 AM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இந்து கோயில்கள், சாமி சிலைகள் சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று (அக்.25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ஹெச். ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இந்து கோயில்களும், சாமி சிலைகளும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் ஐந்தாவது முறையாக சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா தொடர்பான காணொலி

குண்டாஸ் போடாதது ஏன்?

இதுமட்டுமின்றி ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலைச் சிறுத்தை கட்சியை சார்ந்த நிர்வாகி ஒருவர் பெட்ரோல் குண்டு வீசுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குண்டாஸ் போட்டிருக்க வேண்டும்.

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த காவல்துறை, இந்த விஷயத்தில் ஏன் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை?. இந்து சமய அறநிலையத்துறை ஊழலில் திழைத்திருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான கோயில்கள் சிதலமடைந்துள்ளன.

தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களையே பராமரிக்க முடியாத நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 46 இந்து கோயில்களை வசப்படுத்த ஆணை பிறப்பித்தது எப்படி? என தெரியவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி அமைப்பினர்

தங்கத்தை உருக்கி பிஸ்கட்டுகளாக்குவதில் குறி

பல்வேறு சமுதாய மக்களுக்கு சொந்தமான கோயில்களை அரசாங்கம் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. கோயில்கள் மீது அக்கறை இல்லாத இந்து சமய அறநிலையத்துறை, இனி எந்த கோயிலையும் தன்வசப்படுத்தக் கூடாது.

தமிழ்நாட்டில் உள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களை புனரமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைப் பற்றி எந்தவித கவலையும் கொள்ளாத தமிழ்நாடு அரசு, புதிதாக கோயில்களை தன்வசப்படுத்துவதிலேயே குறிக்கோளாக செயல்பட்டு வருகிறது. மேலும் கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி பிஸ்கட்டுகளாக்குவதிலேயே குறியாக செயல்படுகிறது.

இதுபோன்ற செயல்களில் அறங்காவல் குழு மட்டுமே முடிவெடுக்க வேண்டும். அதனை மீறி இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுவது சட்டப்படி தவறு. தமிழ்நாட்டில் அரசின் சட்டவிரோத போக்கைக் கண்டித்து நீதி போராட்டம் கண்டிப்பாக வெடிக்கும்” என்றார்.

இதையும் படிங்க:இந்தியில் மட்டுமே வகுப்பா..? - சு.வெங்கடேசன் எம் பி கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details