இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றியதாக பெரம்பலூர் அதிமுக எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் மீது நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான தமிழ்ச்செல்வன் எழுப்பிய குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்! - gundas act against ntk district seceratry arul perambalur
பெரம்பலூர்: அதிமுக எம்.எல்.ஏ மீது பாலியல் குற்றம் சுமத்திய நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருள் மீது குண்டர் சட்டம் போடுவதற்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.
அருள்
அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக அருள் வெளியிட்ட ஆடியோ ஆதாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் அருள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்படி அருள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.