கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரம் என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்று பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் முறைகேடு செய்து, தேர்வில் வெற்றிப் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடியினர் அவர்கள் 12 பேரையும் விசாரணைக்காக கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
குரூப் 2 தேர்வு முறைகேடு - விசாரணையை ஒத்திவைத்த சிபிசிஐடி - குரூப் 2 தேர்வு முறைகேடு
கடலூர்: குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பிய சிபிசிஐடியினர், தற்போது விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
group-2-exam-scandal
இதனையடுத்து இன்று அவர்கள் கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகவிருந்த நிலையில், சிபிசிஐடி விசாரணை தேதியை ஒத்திவைத்துள்ளது. மேலும் கிழக்கு ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த 12 பேரில் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் வீதம், அதேப்போல் மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - பெண்கள் உட்பட மூன்று பேர் கைது