பெரம்பலூர்: ஆலத்தூர் வட்டம் டி.களத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் புகழேந்தி.
வருங்கால படைப்பாளிகளைத் தேடி வீடுகளின் கதவைத் தட்டும் அரசு பள்ளி ஆசிரியர்! - அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை
அரசுப் பள்ளியில் மாணவர் சேர வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொண்டு வரும் அரசுப் பள்ளி ஆசிரியரின் செயல் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
![வருங்கால படைப்பாளிகளைத் தேடி வீடுகளின் கதவைத் தட்டும் அரசு பள்ளி ஆசிரியர்! govt school teacher door to door campaign](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12172457-575-12172457-1623973931325.jpg)
இவர் பள்ளியில் மரங்கள் நடுவது, பல்வேறு சமூகப் பணிகள் செய்து, பல விருதுகளை பெற்றுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷோபாவின் ஒருங்கிணைப்போடு அரசுப் பள்ளியின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால், ஆசிரியர் புகழேந்தி இரவு பகலாக வீடு வீடாகச் சென்று அரசு உயர்நிலைப் பள்ளியின் சிறப்பு அம்சங்களை பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி, மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றார்.