தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழுகிய முட்டையை சாப்பிடும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

பெரம்பலூர்: அரசுப் பள்ளிகளில் சத்துணவுடன் தரமற்ற அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்காததால் குப்பை தொட்டியில் முட்டைகள் வீசப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

By

Published : Jul 18, 2019, 7:15 PM IST

அழுகிய முட்டை

தமிழ்நாடு முழுவதும் அங்கன் வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் தினமும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களுக்கு வரும் முட்டைகள் மிகவும் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சத்துணவு பணியாளர்கள் புகார் தெரிவித்தும் பயன் ஏதும் அளிக்கவில்லை.

அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் பரம்பரை பணக்கார பிள்ளைகளோ, பேரன்களோ கிடையாது. அன்றாடம் கூலித்தொழிலுக்கு சென்று அன்றைய வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஏழை பெற்றோர்களின் குழந்தைகளாகும். வீட்டில் கிடைக்கும் உணவை விட அங்கன்வாடியில் கிடைக்கும் உணவுதான் ஊட்டச்சத்தாக இருக்கிறது.

அவ்வாறு வழங்கப்படும் உணவுகளில் இதுபோன்று அழுகிய முட்டைகளும், அழுகிய உணவும் கிடைப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details