தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக ஆட்சிக்கு வந்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி' - உதயநிதி - dmk_udayanithi_campaign

பெரம்பலூர்: திமுக ஆட்சிக்கு வந்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

By

Published : Dec 26, 2020, 2:09 AM IST

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற பரப்பரையை பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 25) மேற்கொண்டார். குன்னம் பகுதியில் தொடங்கிய பரப்புரை பயணம், தொடர்ந்து வேப்பூர், லப்பைகுடிகாடு, ரஞ்சன்குடி கோட்டை, செட்டிகுளம், கீழக்கணவாய் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்

பெரம்பலூர் நகரின் காமராஜர் வளைவு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருப்புப் பாதை திட்டம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details