பெரம்பலூரில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துவரும் 16 வயது சிறுமி அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், இந்த விடுதியின் வார்டடன் வெங்கடாசலம் இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கலையரசி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.