தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்யா யோஜனா என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தையல் இயந்திரங்களை கையாள்வது, ஆடை தயாரிப்பு, ஆடை பேட்டன் மேக்கிங், ஃபேஷன் டிசைனர், ஆடை உற்பத்தி மேற்பார்வையாளர் உள்ளிட்டவைகள் வேலைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஆர்வமுடன் ஏராளமானோர் பங்கேற்பு! - திறன் மேம்பாட்டு பயிற்சி
பெரம்பலூர்: வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
பெரம்பலூர்
இந்த பயிற்சியின் மூலம் ஆடைகள் தயாரிப்பு, ஏற்றுமதி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான மத்திய அரசின் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.