தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

35 அம்ச கோரிக்கை: ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் - அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

பெரம்பலூர்: ஊதியக்குழு முரண்பாட்டை களைந்திட வேண்டும் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

protest
protest

By

Published : Sep 22, 2020, 4:31 PM IST

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்,
  • வேலைநிறுத்த காலங்கள் அனைத்தையும் பணிக்காலமாக வரன்முறை செய்துவிட வேண்டும்,
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை ஊழியர்களுக்கு வழங்குவதுபோல தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூபாய் 7000 வழங்கிட வேண்டும்,
  • அதேபோல் கடந்த காலங்களில் வழங்கியதைப் போன்று A மற்றும் B பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கருணைத் தொகை வழங்கிட வேண்டும்,
  • ஊதிய முரண்பாடுகளைக் களையும் குழுவின் பரிந்துரைகளின்படி அரசாணைகளை உடனே வெளியிட வேண்டும்,
  • 21 மாத கால ஊதிய நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும்

உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பந்தட்டை என நான்கு ஒன்றியங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை பிரிவு அலுவலகத்திலும் பணிபுரியும் அலுவலர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details