பெரம்பலூர்:திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று பெரம்பலூருக்கு வருகை (செப்.5) தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், 'பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை அரசு ஏன் இன்னும் தடை செய்யவில்லை என்பது குறித்து சந்தேகம் தோன்றுகிறது. இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்க்கக்கூடிய விக்ராந்த் போர்க்கப்பல் தந்த மத்திய அரசை நான் பாராட்டுகிறேன்.
டெல்டா மாவட்டப் பகுதிகளில் சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெறுகின்ற வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அலங்காரப் பணிகள் தேவையில்லை; மாறாக ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.