தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் தேவை தாக்கம் எதிரொலி: ஊர்கூடி தூர்வாரிய பொதுக்கிணறு - people

பெரம்பலூர்: குன்னம் அருகே பேரளி கிராமத்தில் உள்ள பொதுக் கிணறு  பொதுமக்களால் தூர்வாரப்பட்டது.

தூர்வாரும் பொதுமக்கள்

By

Published : Aug 9, 2019, 4:20 AM IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் பொதுக்கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு பல வருடங்களுக்கு முன்பு மக்களின் அனைத்து தேவைகளுக்கும், உதவியாக இருந்தது. நாளடைவில் தூர்ந்து போய் பயன்படுத்த முடியாமல் போனது.

கிணற்றை தூர்வாரும் பொதுமக்கள்

இந்நிலையில் தற்போது கிராமத்தில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் புதிய பயணம் இளைஞர் அமைப்பினர், பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தூர்ந்து போன கிணற்றில் உள்ள கழிவுகள், நெகிழி பைகளை அகற்றினர். மேலும், மழைக் காலத்தில் இக்கிணற்றில் நீரைச் சேமித்தால் கோடைகாலங்களில் குடிநீர்த் தேவைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details