பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணாநிதி(20). இவர் பெரம்பலூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். கபடி போட்டியில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்ட இவர், கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு தேர்வு பெற்றார்.
இதனைத்தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய குணாநிதி, இறுதிப்போட்டியில் அரியானா மாநிலத்தோடு வெற்றி பெற்றதன் மூலமாக தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அடுத்த மாதம் நேபாள நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்கு இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.