தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு - full lockdown announced at perambalur

பெரம்பலூர் நகராட்சி லப்பைக்குடிகாடு, அரும்பாவூர் பேரூராட்சிகளில் வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு
பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு

By

Published : Aug 3, 2021, 11:50 AM IST

பெரம்பலூர்:கரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதிகளில் வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளில் ஆகஸ்ட் 4 முதல் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவாமல் தீவிர நோய் கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பின்குறிப்பிட்டுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1.பெரம்பலூர் சிவன் கோவில் முதல் வானொலி திடல் வரை
2.வானொலி திடல் முதல் பழைய பேருந்து நிலையம் வரை
3.பழைய பேருந்து நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை
4.பழைய பேருந்து மார்கெட் பகுதி
5.தபால் நிலையம் வீதி
6.கடைவீதி என்.எஸ்.பி சாலை
7.பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள்

அரும்பாவூர் பேரூராட்சியில்
1.தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை,
2.பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரை,

லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில்
1. மாட்டு பாலம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை

இந்த நேரத்தில் மருந்தகங்கள், காய், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிற விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் நிலையான வழி காட்டு நெறிமுறைகள் பின்பற்றி அனுமதிக்கப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'கரோனா‌ 3ஆவது அலையை எதிர்கொள்ள தயார்'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details