தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் ஆதரவற்றோர்களுக்கு இலவச மதிய உணவு! - latest news

பெரம்பலூரில் தனியார் உணவக உரிமையாளர் ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

பெரம்பலூரில் ஆதரவற்றர்களுக்கு இலவச மதிய உணவு - தனியார் உணவக உரிமையாளர்
பெரம்பலூரில் ஆதரவற்றர்களுக்கு இலவச மதிய உணவு - தனியார் உணவக உரிமையாளர்

By

Published : Jun 7, 2021, 8:41 PM IST

பெரம்பலூர் மாவாட்டம் அஸ்வின்ஸ் உணவக உரிமையாளர் கேஆர்வி கணேசன். இவர் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் செஞ்சேரி வித்யாஸ்ரம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் வேலாகருணை இல்லம், காதுகேளாத மாணவர்களை பராமரிக்கும் கௌதமபுத்தர் பள்ளி, ஆதரவற்றோர்களை பராமரிக்கும் தண்ணீர் பந்தல் முதியோர் காப்பகம் ஆகியவற்றில் தங்கியிருக்கும் அனைவருக்கும் வருடம் முழுவதும் மதியந்தோறும் இலவச உணவை வழங்கிறார்.

இதனால், ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், காதுகேளாத, பேசமுடியாத மாணவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என தினமும் 386 பேர் பசியாறி வருகிறார். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் இந்த சேவையை வழங்கி வரும் அஸ்வின்ஸ் கேஆர்வி கணேசன், கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கூட தனியாக உணவு சமைத்து வழங்கி தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.

அவர்களது சொந்த வாகனத்திலேயே தினமும் எடுத்துச்சென்று உணவு வழங்கி வரும் உணவகத்தின் சேவையை சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details