பெரம்பலூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம், ஆத்தூர் சாலை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாக பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டு: நான்கு பேர் கைது! - வாகனங்கள் திருட்டு
பெரம்பலூர்: இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து பெரம்பலூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் பால்ராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டதாக பெரம்பலூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார், லாடபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், சதீஷ், பெரியசாமி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடமிருந்து பதினொரு இருசக்கர வாகனங்கள், மூன்று சவரன் செயின், இரண்டு செல்ஃபோன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.