கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஒரு காரில் சென்றுள்ளனர்.
சாமி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் இன்று (ஏப்.03) மதியம் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றனர். அப்போது, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மலையப்ப நகர் பிரிவு பாதை அருகே வந்தபோது இவர்களது காரை முந்திச் சென்ற கார் மோதுவது போல் வந்ததால் வலதுபுறம் காரை திருப்பியுள்ளனர்.
அப்பொழுது சென்னை - திருச்சி மார்க்கத்தில் எதிர்திசையில் வந்த லாரி, கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கண்ணன், கார்முகில் லிங்கேஸ்வரன், தமிழரசி ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர்.