உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தமிழ்நாட்டில் சென்னையைத் தாண்டி பிற மாவட்டத்திலும் வேகமாகப் பரவிவருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் நேற்று (ஆகஸ்ட் 01) 82 வயது மூதாட்டி உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி, 68 வயது முதியவர் மற்றும் அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது நபர், எம்.பி.கே நகரைச் சேர்ந்த 45 வயது பெண் ஆகிய நான்கு பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 497 ஆகவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 306 ஆகவும் உள்ளது. பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 191 ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க:'தூத்துக்குடியில் கரோனா பரிசோதனைகள் அதிகரித்துள்ளன' - மாவட்ட ஆட்சியர்