தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்

பெரம்பலூர்: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் பேரூராட்சி பகுதிகள் உள்ளிட்ட சிறு நகரங்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

formers workers union protest
formers workers union protest

By

Published : Oct 6, 2020, 2:20 PM IST

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் பேரூராட்சி பகுதிகள் உள்ளிட்ட சிறு நகரங்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தை தொடங்கிட வேண்டும், மத்திய நகர்ப்புற வளர்ச்சி இணைச் செயலர் அறிக்கைப்படி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உடனே தொடங்க வேண்டும், கரோனா கால நிவாரணமாக குடும்பத்திற்கு 1,500 ரூபாய் வழங்க வேண்டும், முதியோர் ஓய்வூதியம் 60 வயதை கடந்த அனைவருக்கும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

திருப்பத்தூரில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பு : முதியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details