பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் தேவராஜன். கடின உழைப்பு காரணமாக மருத்துவத் துறையில் தடம்பதித்து மருத்துவரான இவரை, 'திமுகவின் அடித்தளம்' என்று திமுக நிர்வாகிகள் அழைத்தனர்.
1996 முதல் 2001 வரை பெரம்பலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்ட இவர், உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு திமுக முக்கியப் பிரமுகர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.