கரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு தொழில்கள் முடங்கின. அதன்படி தெருக்கூத்து, தாரைத் தப்பட்டை, டிரம்ஸ் செட் கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட தெருக்கூத்து, தாரை தப்பட்டை கலைஞர்கள் உள்ளனர்.
கரோனா நிவாரணம் வழங்கக்கோரி தாரைத் தப்பட்டையுடன் மனு!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கரோனா காரணமாக, பாதிக்கப்பட்ட தங்களது வாழ்வாதாரத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை வைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாட்டுப்புறக் கலைஞர்கள்
அவர்களில் 100 பேர் இன்று கரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனு அளிக்கும் போது அவர்கள் தாரைத் தப்பட்டை அடித்தும், தெருக்கூத்துக்குச் செல்லும்போது அணியும் வேடமணிந்தும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.