பெரம்பலூர்: சுட்டெரித்த கோடைகாலம் முடிவுற்ற நிலையில், பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 17) மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.
இக்கிராமத்திலுள்ள ஏரியில் தண்ணீர் குறைந்ததைத்தொடர்ந்து அருகிலுள்ள அண்ணமங்கலம், அரசலூர், அனுகூர், குடிகாடு, வேப்பந்தட்டை வெங்கலம், கோனேரிபாளையம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த மீன் பிடித்திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
லாவகமாக தான் பிடித்த மீனை உற்சாகத்துடன் காட்டும் கிராமவாசி அத்துடன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், ராசிபுரம், உள்ளிட்டப் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்து கலந்துகொண்டனர். குறிப்பாக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் சிறு வலைகள், சேலைகள், கொண்டு மீன்களைப் பிடித்தனர். இதில் கெண்டை, கெளுத்தி, நெத்திலி, வாளை, மத்தி உள்ளிட்ட பல வகையான மீன்களை அள்ளிச்சென்றனர்.
இதையும் படிங்க: முசிறி அருகே மீன்பிடி திருவிழா கோலாகலம்!