தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 8, 2020, 12:29 PM IST

ETV Bharat / state

மீன்வளர்ப்பு செய்பவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பு செய்பவர்கள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பு செய்பவர்கள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பு செய்பவர்கள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்

தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பு செய்பவர்கள் உள்ளிட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் ஏற்கனவே உறுப்பினராகப் பதிவுசெய்து மீன் வளர்ப்பு செய்பவர்களுக்கு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் உள்ளீட்டு மானியம் வழங்கிட ஏதுவாக உரிய விண்ணப்பங்கள் மீன்வளத்துறை மூலம் வரவேற்கப்படுகின்றன.

உள்ளீட்டு மானியம் பெற விரும்புவோர் கடந்த மூன்று ஆண்டுகளில் (2017_ 18 முதல் 2018 _19 வரை) அரசிடமிருந்து எந்த ஒரு உள்ளீட்டு மானியமும் பெற்றிருக்கக் கூடாது.

உள்ளீட்டு மானியம் பெறுவது தொடர்பாக நிலம் தொடர்பான ஆவணங்கள், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் பதிவு ரசீதுடன் "மீன்வள ஆய்வாளர் அலுவலகம் எஸ் கே சி காம்ப்ளக்ஸ் முதல் தளம் புதிய பேருந்து நிலையம் அருகில் பெரம்பலூர் 621212". என்ற முகவரியில் இயங்கிவரும் மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04329 228699 என்ற தொலைபேசி எண்ணிலோ 63813 44399, 97159 23451 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது adfariyalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பெரம்பலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details