பெரம்பலூர்: கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
கிணற்றில் தவறி விழுந்த நபரை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்
தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து கீழே விழுந்த நபரை உயிருடன் மேலே தூக்கி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், முகமது பட்டினம் என்ற கிராமத்தில் சுமார் 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் திலீப் (வயது 40) என்பவர் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இது குறித்து அங்கு இருந்தவர்கள் உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து கீழே விழுந்த நபரை உயிருடன் மேலே தூக்கி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினரை ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.