விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த நவம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த ஒரு விழாவில் இந்து கோயில்கள் பற்றி பேசினார். இது சர்ச்சைக்குள்ளானதை அடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு! - தொல். திருமாவளவன்
பெரம்பலூர்: இந்துக் கோயில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
fir-filed-against-viduthalai-suiruthagal-party-leader-thirumavalavan
இந்நிலையில், திருமாவளவனை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை இந்து முன்னணியினர் நடத்தினர். இதனிடையே பெரம்பலூர் இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது 153(B),295(A),298&504 IPC உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சிக்ஸ் பேக்' நடிகை ஹாலே பெர்ரிக்கு திடீர் காயம்!